OUR CLIENTS
மருத்துவத்துறையில் கடந்த 6 ஆண்டில் 25000 பேர் நியமனம் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
மருத்துவத்துறையில் கடந்த 6 ஆண்டில் 25000 பேர் நியமனம் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி Posted on 02-Feb-2019 மருத்துவத்துறையில் கடந்த  6 ஆண்டில் 25000 பேர் நியமனம் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

வேலூர், பிப்.2-

வேலூர் மாவட்டம் வேலூரையடுத்த அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நேற்று 01-02-2019 அன்று ஆய்வகம் மற்றும் புதிய அவசர சிகிச்சைப்பிரிவு ஆகியவை திறந்து வைக்கப்பட்டது. 

தமிழகத்தில் மட்டும் 6 ஆண்டில் மருத்துவத்துறையில் 25000 பேர் பணியமர்த்தப் பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
வேலூர் அடுத்த  அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சுமார் 14 கோடியே  50 லட்சம் மதிப்பிலான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, இருதய உள்ளுடுருவிக் கருவி ஆய்வகம், இரத்த புரத நோய்கள் ஆய்வகம், மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவை மையம், சிறுநீரகம் சுத்திகரிப்பு பிரிவு விரிவாக்கம் மற்றும் காந்த அதிர்வு பிம்பங்கள் ஆகிய கட்டிடங்களை மாநில சுகாதார துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் மட்டும்  6 ஆண்டில் மருத்துவத்துறையில் 25000 பேர் நியமித்துள்ளோம், விரைவில் ஒரு வார காலத்திற்குள் 1800 மருத்துவர்கள் மற்றும் 2345 செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் மருத்துவர்கள் பற்றாக்குறை நீக்கப்படும். மேலும் தமிழகம் முழுவதும் எழுபத்தைந்து இடங்களில் விபத்து ஏற்பட்டால் அனைத்து சிகிச்சையும் ஒரே இடத்தில் அளிக்கும் வகையில்  ரூ.190 கோடி ரூபாய் மதிப்பில் உயர் சிகிச்சை சிறப்பு மையங்கள் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்படும். 
உடல் உறுப்பு தானத்தில் வெளிப்படைத் தன்மையை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. இதில் எந்த குறைபாடும் இல்லை. மேலும் உடல் உறுப்பு தானம் அளிப்பவர்கள் தாங்கள் யாருக்கு உடல் உறுப்புக்கள் அளிக்கிறோம் என்ற விவரத்தை தெரிந்து கொள்ளும் வசதியும் தற்போது ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாநில பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி வீரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர் .

Label