OUR CLIENTS
மம்தா தர்னா: ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு
மம்தா தர்னா: ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு Posted on 04-Feb-2019 மம்தா தர்னா: ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு

மேற்கு வங்கம், பிப்.04-

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்னாவுக்கு ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, தேவே கௌடா, அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  

இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவுகள்:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு:
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஜனநாயகத்தை பாதுகாக்க கூட்டாக செயல்படத் தொடங்கியதில் இருந்து, மோடி தலைமையிலான பாஜக நம்பிக்கையை இழக்கிறது. மத்திய அரசு, தன் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளை தவறாக பயன்படுத்தி மாநிலங்களில் உள்ள அரசியல் எதிரிகளை பலியிடுவது ஆபத்தான விளைவை நோக்கி செல்கிறது. 
கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ள சம்பவங்களுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம். மோடி-ஷா கூட்டணி அமைப்புகளை அழிக்கின்றனர் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவது நாட்டில் பேரழிவு விளைவுகளை உண்டாக்கும். 
இது அதிர்ச்சியளிக்கிறது. இதை கடுமையாக கண்டிக்கிறோம். நாட்டின் கூட்டாட்சி தத்துவம் மற்றும் அமைப்புகளை பாதுகாக்க மேற்கு வங்க முதல்வருடன் துணை நிற்கிறோம். (ஹேஷ்டேக்கில் ஜனநாயகத்தை பாதுகாப்போம்)
முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவே கௌடா:
மேற்கு வங்கத்தில் காவல் ஆணையரை கைது செய்ய சிபிஐ முற்படுவதும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளும் அதிர்ச்சியளிக்கிறது. நெருக்கடி நிலை காலகட்டத்திலும் இதுபோன்ற அரசமைப்புக்கு எதிரான செயல்களை நாடு எதிர்கொண்டது. மேற்கு வங்கத்தில் நிலவும் சூழல் நெருக்கடி நிலை காலகட்டத்தில் நிலவியது போல் உள்ளது. (ஹேஷ்டேக்கில் ஜனநாயகத்தை பாதுகாப்போம்) 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி:
மம்தா பானர்ஜியை இன்று இரவு தொடர்பு கொண்டு பேசினேன். அவரிடம் நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம் என்று தெரிவித்தேன்.மேற்கு வங்கத்தில் நிகழும் சம்பவங்கள், மோடி மற்றும் பாஜக இந்திய அமைப்புகள் மீது நடத்தும் கடுமையான தாக்குதல்களின் பகுதி. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து, இந்த பாசிச படைகளை வீழ்த்துவோம். 
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்:
மம்தாவுடன் பேசினேன். அவரிடம் எனது ஆதரவை தெரிவித்தேன். மோடி-ஷா கூட்டணியின் நடவடிக்கை முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரானது. 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:
பாசிச பாஜக அரசின் கீழ் அனைத்து சுயாதீன அமைப்புகளும் சமரசத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. நாட்டின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். (ஹேஷ்டேக்கில் ஜனநாயகத்தை பாதுகாப்போம்) 
சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ்:
பாஜக, தவறான வழியில் ஆட்சியை தக்கவைக்க நினைக்கிறது. தோல்வியை கண்டு அவர்கள் பயத்தில் உள்ளனர். அதனால், அவர்கள் சிபிஐயை தேர்தல் ஏஜென்டுகளாக பயன்படுத்தப்படுகின்றனர். இது ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது. 

Label