OUR CLIENTS
அரசு விழாக்களில் சுயவிளம்பரத்துக்காக நிகழ்ச்சி புறக்கணிப்பில் ஈடுபடும் எம்எல்ஏ.,!
அரசு விழாக்களில் சுயவிளம்பரத்துக்காக நிகழ்ச்சி புறக்கணிப்பில் ஈடுபடும் எம்எல்ஏ.,! Posted on 05-Feb-2019 அரசு விழாக்களில் சுயவிளம்பரத்துக்காக நிகழ்ச்சி புறக்கணிப்பில் ஈடுபடும் எம்எல்ஏ.,!

வேலூர், பிப்.5-

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் நந்தகுமார். இவர் வேலூர் மாநகர மாவட்ட செயலாளராகவும் திமுகவில் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அடிக்கல் நாட்டு விழா ரூ.14 கோடியே 50 லட்சம் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க அமைச்சர் விஜயபாஸ்கர் வருகை தந்தார். அவருடன் அமைச்சர் கே.சி.வீரமணியும் வருகை தந்தார். இந்நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த நந்தகுமார் எம்எல்ஏ சில மணித்துளிகளில் அந்த விழா கல்வெட்டில் தனது பெயர் பொறிக்கப்படவில்லை என்று கூறி விழாவை தான் புறக்கணிப்பதாக கூறி திடீர் ரகளையில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக சில செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் அவர் பின்னால் வால் பிடித்து சென்றனர். ஆனால் அந்த கல்வெட்டில் நந்தகுமார் பெயர் உள்ளதை யாரும் சரியாகவே பார்க்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இப்படி விஷயம் தெரியாமல் கலாட்டா செய்த நந்தகுமாரின் செயல் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்று அந்த விழாவுக்கு வந்திருந்த பொதுமக்கள் கேலியும், கிண்டலுமாக பேசிக் கொண்டனர். 
இவ்விழாவில் இம்மருத்துவமனை அமைந்துள்ள அணைக்கட்டு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள நந்தகுமாரும் கலந்து கொண்டு விழாவில் கல்வெட்டு திறக்கும் வரை இருந்துவிட்டு தன் பெயர் கல்வெட்டில் இல்லை என்றும், பெயர் இடம் பெறவில்லை என்று சாதித்தார். அத்துடன் விழாவை தான் புறக்கணிப்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் சிரிப்பாய் சிரித்தனர். நந்தகுமார் ஏன் இப்படி அவசரப்படுகிறார்.  உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கல்வெட்டில் தொகுதி எம்எல்ஏ நந்தகுமாரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. இதேபோன்றுதான் இதற்கு முன்னர் நடைபெற்ற ஒவ்வொரு அரசு விழாக்களிலும் தன் பெயர் அழைப்பிதழில் இடம் பெறவில்லை என்று ரகளையில் ஈடுபட்டார். இது அனைவருக்கும் நன்கு தெரியும். அமைச்சர் வீரமணி முன்னிலையில் ஒரு அரசு விழாவில் அணைக்கட்டு தொகுதியில் இந்த பிரச்னையை தொடங்கியவர் இதுநாள் வரை தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். அரசு விழாக்களை புறக்கணிப்பதையே தொழிலாக கொண்டுள்ளார் நந்தகுமார் எம்எல்ஏ., ஒவ்வொரு அரசு விழாவிலும் எம்எல்ஏ என்ற முறையில் நந்தகுமார் பெயர் தொடர்ந்து அழைப்பிதழில் இடம் பெற்று வருகிறது. இந்த அழைப்பிதழ்களை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் பிழை திருத்திய பிறகுதான் அச்சகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு அரசு விழாவுக்கும் முறைப்படி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதை விட என்ன மரியாதை செய்ய வேண்டும் என்பது அரசு அலுவலர்களுக்கு புரியாத புதிராக மாறியுள்ளது. 
அத்துடன் பொது இடத்தில் அரசு விழா நடைபெறும் இடத்தில மாவட்ட ஆட்சியர் ராமனிடம் ஏன் என்னை இந்நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்று மரியாதை இல்லாமலும், தரக்குறைவாகவும், எம்எல்ஏவுக்கு உரிய வகையில் நடந்து கொள்ளாமல் தான்தோன்றித் தனமாக நடந்து கொண்டதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேச்சு அடிபட ஆரம்பித்து விட்டது. இப்படி தொடர்ந்து சுயவிளம்பரத்துக்காக அரசு திட்டங்களை கொச்சைபடுத்தும் நோக்கத்தோடும் செயல்பட்டு வரும் நந்தகுமார் எம்எல்ஏவின் செயலை கண்டு அரசு அலுவலர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதே வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ ப.கார்த்திகேயனோ அரசு விழாக்களில் அமைச்சர் வீரமணியுடன் கலந்து கொண்டு விட்டு சிற்றுண்டி அருந்து விட்டு மகிழ்ச்சியுடன் பரஸ்பரம் பாராட்டி விட்டு செல்கிறார். அவர் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை. 
ஆனால் நந்தகுமாரின் நடவடிக்கை பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஒரு செய்தியாளர் குழுவை தன் பின் கொண்டு வந்து அந்த நிகழ்வுகளை பதிவு செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைமை இதுகுறித்து உண்மை நிலையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற குழு வந்த போதும் இதே பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. குழுவில் நந்தகுமாரும் ஒரு உறுப்பினர். குழுவினர் வருவது நந்தகுமாருக்கு தெரியாதா?. பின்னர் ஏன் அந்த நிகழ்விலும் ரகளை அரங்கேறியது என்பதே இன்னமும் விடை தெரியாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையை நந்தகுமார் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், பொதுவாழ்வில் இதுவெல்லாம் சகஜம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்  சமூக ஆர்வலர்கள். இப்படி எடுத்ததற்கெல்லாம் கோபித்து கொண்டு பொதுஇடத்தில் ரகளை செய்வது நாகரிகமாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். இனி நந்தகுமாரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுமா? இல்லை தொடருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label