OUR CLIENTS
காற்றிலே பறக்கும் கலெக்டர் உத்தரவு! பாலாறு என்ன ஹோல் சேல் குப்பை தொட்டியா?
காற்றிலே பறக்கும் கலெக்டர் உத்தரவு! பாலாறு என்ன ஹோல் சேல் குப்பை தொட்டியா? Posted on 05-Feb-2019 காற்றிலே பறக்கும் கலெக்டர் உத்தரவு! பாலாறு என்ன ஹோல் சேல் குப்பை தொட்டியா?

வேலூர், பிப்.5-

எச்சரிக்கை பாலாற்றில் குப்பை கழிவுகள் கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு கீழே மாவட்ட ஆட்சியர் வேலூர் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ள பெரிய டிஜிட்டல் பேனர் புதிய பாலாற்றின் கரையோரம் வைக்கப்பட்டு பல மாதங்களாகிறது.

ஆனால் இது வெறும் கண்கட்டு வித்தைபோல  ஆகிவிட்டது. காரணம் ஆட்சியரின் அறிவிப்பை அலட்சியம் செய்துவிட்டு குப்பை கழிவுகளை பாலாற்றில் கொட்டி தீவைத்து நாசமாக்கும் செயல் தினமும் நடக்கிறது. ஏதோ வெளியாட்கள் இந்த துணிகர செயலை செய்கிறார்கள் என்று நினைத்தால் நாம் ஏமாளியாவோம். காரணம் ஸ்மார்ட் சிட்டியை பராமரிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் அரசு வாகனத்தில் குப்பை கழிவுகளை கொண்டு வந்து நட்ட நடு ஆற்றில் கொட்டி தீ வைத்து பாலாற்றை நாசப்படுத்துகின்றனர் துப்புரவு பணியாளர்கள். 
மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள துப்புரவுப் பணியாளர்கள்தான் இந்த மாபாதகச்செயலைச் செய்கின்றனர். ஒட்டல் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், இறந்துபோன மிருகங்கள் என அனைத்து கழிவுகளையும் கொட்டி பாலாற்றை குப்பைத்தொட்டியாக்கும்  பணியை செய்ய அரசுப்பணி தேவையா?. இதைப்பராமரிக்க, பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என பல துறைகள் இருந்தாலும் அவர்களது பணி இயற்கை வளத்தை நாசமாக்குவதுதான் என கங்கனம் கட்டிக்கொண்டு செயல்படுவதே இவர்களுக்கு முதன்மையான நோக்கமாகம்.... மேலும் பாலாற்றின் கரையோரம் குப்பை கொட்டும் குடோன் ஒன்றை நிர்மாணிக்கும் வரலாற்று பிழையைச் செய்யப்போவதாக தெரிகிறது. ஆதி மனிதனின் நாகரிகத்தை நிர்மாணம் செய்தது ஆறுகள் எனபதை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர், வரலாற்றுச்சான்றும் அதை தெளிவுபட உரைக்கிறது, ஆனால் இன்றைய நாகரிகமான படித்த அரசு பணியிலுள்ள அதிகாரிகள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிறது. இயற்கையன்னையின் கொடையான பாலாறு. 
பாலாறு குறித்து பல செய்தியாளர்கள் செய்திகள் வெளியிட்டும், இன்றுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் இருந்தென்ன லாபம்?. "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று" என்ற குறட்பாவுக்கு ஏற்ற வகையில் செயலாற்ற வேண்டும். இப்படி வெறும் அறிவிப்போடு கடமைக்காக பணியாற்ற கூடாது. மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவிப்பு செய்துள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இப்போது யார் பாலாற்றில் குப்பை கொட்டுகின்றனர் என்பது வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது. மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்தான் இந்த பணியை செய்கின்றனர் என்பது வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது. 
பாலாற்றில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது போன்று மாநகராட்சி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கையை தயக்கமின்றி எடுக்குமா? நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறதா? என்பதை மாவட்ட ஆட்சியர் ராமன்தான் முடிவு செய்ய வேண்டும். மாநகராட்சி மீது ஆட்சியர் ராமன் பானம் விடுவாரா?.  இப்போதுள்ள சூழ்நிலையில் நம்மால் ஒரு கிலோ மணலை ஆற்றுக்குள் கொண்டு சேர்க்க முடியுமா?. ஆனால் ஆற்றில் மணல் அள்ளி, மண்ணும் அள்ளி கட்டாந்தரையாக்கி அழகுபார்த்த பெருமை வேலூர் அரசு அதிகாரிகளையே சேரும். இப்படி அழகிய பாலாற்றை என்ன ஹோல் சேல் குப்பை தொட்டியாக மாற்ற வேலூர் மாநகராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்படுகிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது. மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மாநகராட்சியில் என்னென்ன பணிகள் எந்த லட்சணத்தில் நடக்கிறது என்பதை மேற்பார்வையிடமாட்டாரா? தனது இருக்கையில் இறுக்கி அமர்ந்து கொண்டு பணியை கவனித்து வருகிறாரா? என்ற சந்தேகம் மாநகர மக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பாலாற்றை காக்கப் போகிறார்களா? இல்லை பாழாக்கப் போகிறார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label