OUR CLIENTS
ஈர நிலங்களை காப்பாற்ற புதிய முயற்சி: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு
ஈர நிலங்களை காப்பாற்ற புதிய முயற்சி: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு Posted on 07-Feb-2019 ஈர நிலங்களை காப்பாற்ற புதிய முயற்சி: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு

நீலகிரி, பிப்.07-

நீலகிரியில் அழிந்து வரும் ஈர நிலங்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் எடுக்கும் புதிய முயற்சி  சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு 900 சதுர கி.மீ. பரப்பில் இருந்த வனப் பகுதிகளில் 70 சதவீதம் புல்வெளியாகவும், 30 சதவீதம் காடுகளாகவும் இருந்தன.  இவற்றில் ஈரப்பதம் நிறைந்த பசுமை மாறாக் காடுகள், சோலை புல்வெளி, இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகள், சவானா புல்வெளிக் காடுகள் என இருந்துள்ளன.
ஈரநிலம், சதுப்பு நிலம் போன்றவற்றுக்கு முக்கிய காரணியாக விளங்கிய இவ்வகை புல்வெளிகள் ஆக்கிரமிப்புகளாலும், இதன் பயனை அறியாதவர்களாலும் 96 சதவீதம் அழிக்கப்பட்டன. ஈரநிலத்துக்கு எதிரான யூகலிப்டஸ், சீகை, லேண்டனா, பார்த்தீனியம் போன்ற வெளிநாட்டு தாவரங்களின் ஆக்கிரமிப்பு நமது உள்ளூர் பாரம்பரிய புல்களை அழித்துவிட்டன. 
இதனை பாதுகாப்பதற்காக இந்த இயற்கை புல்வெளிகளை அதிகப்படுத்த நீலகிரியின் பசுமை வரியில் இருந்து ரூ. 1 லட்சம் நிதியை மாவட்ட ஆட்சியர் ஒதுக்கீடு செய்தார்.  அதில், குன்னூர் எடப்பள்ளி பகுதி முதன் முதலாகத் தேர்வு செய்யப்பட்டு அங்கு அழிவின் பிடியில் உள்ள நீர் நிலை பகுதியில் புல் நாற்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 
மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சியை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

Label