OUR CLIENTS
காட்பாடி அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் வாடிக்கையாளர்களிடம் அடாவடி வசூல்!
காட்பாடி அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் வாடிக்கையாளர்களிடம் அடாவடி வசூல்! Posted on 07-Feb-2019 காட்பாடி அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் வாடிக்கையாளர்களிடம் அடாவடி வசூல்!

வேலூர், பிப்.7-

காட்பாடி அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் வாடிக்கையாளர்களிடம் அடாவடி வசூல் செய்வதாக நுகர்வோர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.

வேலூர் அடுத்த காட்பாடியில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில் பி.அப்து பிரதர்ஸ் மீன் அங்காடி செயல்பட்டு வருகிறது. இவர்கள் வேலூர் மக்கான் பகுதியில் உள்ள மாநகராட்சி மீன் மார்க்கெட்டிலும் மீன் கடை வைத்து நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் இந்த பி.அப்து பிரதர்ஸ். இவர்கள் வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் மீன் கடைகளை வைத்து கொண்டு கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். 
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் நேற்று இரவு காட்பாடி பகுதியில் உள்ள மீன் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் மீன் வாங்கியுள்ளார். அவரிடம் ரூ.500 அதிகமாக எடுத்து கொண்டு மீதி சில்லரையை கொடுத்துள்ளார் அந்த மீன்கடைக்காரர். அதையும் கவனிக்காமல் (சரிபார்க்காமல்) வாங்கிய அந்த வாடிக்கையாளர் சந்தேகம் ஏற்பட்டு அங்கேயே சரிபார்த்த போது ஏன் ரூ.500 குறைவாக கொடுத்துள்ளீர்கள் என்று அந்த மீன்கடைக்கார்களிடம் கேட்டதற்கு இங்கு கூட்டம் அதிகம் இப்படித்தான் நாங்கள் தருவோம் என்று தெனாவெட்டாக பதில் அளித்துள்ளனர். அத்துடன் அங்கு விற்பனை செய்யப்படும் மீன்கள் நாட்பட்ட மீன்கள் என்று நுகர்வோர் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. 
அங்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளர் ஏன் மீன் செவுல் சிவப்பாக இல்லாமல் வெளிரிய நிறத்துடன் காணப்படுகிறது என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு அந்த மீன்கடைக்காரர்கள் விருப்பம் இருந்தால் மீன் வாங்கி செல்லுங்கள், கேள்வி எதுவும் கேட்க கூடாது என்று பதில் அளித்துள்ளனர். அத்துடன் மீனை தொடாதீர்கள் என்று வாடிக்கையாளர்களை மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். கேரள மாநிலம், கன்னியகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் நாட்பட்ட மீன்கள் இங்கு குளிரூட்டப்பட்ட ஃபிரீசர் பெட்டிகளில் வைத்து அடைக்கப்பட்டு விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். சில மீன்கள் கெட்டுப்போன நிலையில் இருப்பதையும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காமல் ஏமாற்றி ஐஸ் வைத்த மீன்களை ஏமாற்றி விற்பனை செய்து வருகிறார்கள். 
இதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வேலூர் மாநகராட்சி காட்பாடி மண்டல அலுவலர் மதிவாணன், சுகாதார ஆய்வாளர்கள் யாரும் இந்த கடைகளில் சோதனை செய்ததாக தெரியவில்லை. இப்படி கெட்டுப்போன மீன்களை வைத்து விற்பனை செய்து பொதுமக்களுக்கு பல வயிறு தொடர்பான உபாதைகளை ஏற்படுத்தி வரும் பி.அப்து பிரதர்ஸ் போன்ற கடைகள் மீது இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராகவே உள்ளது. இந்த கடையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே வாடிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மாநகராட்சி அலுவலர்களின் நடவடிக்கை எடுப்பார்களா? இல்லை வழக்கம்போல காற்றிலே பறக்கவிட்டு விட்டு வேலையை பார்த்து செல்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க  வேண்டும்.

Label