OUR CLIENTS
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு!
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு! Posted on 07-Feb-2019 ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு!

வேலூர், பிப்.7-

வேலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங் களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் பிரவேஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் வேலூர் அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ஊர் காவல் படை அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களைப் பெற ஆதார் அட்டை, மதிப்பெண் பட்டியலைக் கொண்டு செல்ல வேண்டும்.  இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 முதல் 50 வயதுக்கு உள்பட்டவராகவும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவராகவும் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 15-ஆம் தேதிக்குள் உதவி ஆய்வாளர், ஊர்க் காவல்படை அலுவலகம், அண்ணாசாலை, வேலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Label