OUR CLIENTS
கடலூர் மாவட்டத்தில் படிப்படியாக குறையும் நூறு நாள் வேலைக்கு தொழிலாளர்கள் எண்ணிக்கை!
கடலூர் மாவட்டத்தில் படிப்படியாக குறையும் நூறு நாள் வேலைக்கு தொழிலாளர்கள் எண்ணிக்கை! Posted on 07-Feb-2019 கடலூர் மாவட்டத்தில்  படிப்படியாக குறையும் நூறு நாள் வேலைக்கு தொழிலாளர்கள் எண்ணிக்கை!

கடலூர், பிப்.7-

மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் பா.ஜ., ஆட்சிக்காலத்தில் பயனுள்ள திட்டமாக மாற்றியமைக்கப் பட்டுள்ளதால் வேலைக்கு வரும் தொழிலாளர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழகத்தில் விவசாயம் மற்றும் விவசாய தொழிலாளர் களை காப்பாற்றவும் நிலத்தடி நீர் வற்றி வருவதை தடுக்க நீர்நிலைகளை ஏற்படுத்தவும் மத்திய அரசுமகாத்மா காந்தி கிராமப்பற வேலை உறுதி திட்டத்தை கடந்த 2007 -08ம் தேதி அறிமுகப்படுத்தியது. இதில் கிராமத்தில் உள்ள விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டது. ஏராளமான விவசாயக் கூலித்தொழிலாளர்கள் பயனடைந் தனர்.இத்திட்டம் கிராம பகுதிகளுக்கு மட்டும் என்பதால் கிராமங்களில் இருந்து நகரத்தில் குடியேறியவர்கள் கூட மீண்டும் கிராமங்களுக்கே திரும்பினர். தமிழகத்தில் சிறப்பாக இத்திட்டம் செயல்பட்டு வந்தாலும், வேலை செய்யாமலேயே சம்பளம் பெறும் திட்டமாக உள்ளதாக புகார் எழுந்தது. மேலும் விவசாய பணிகள் முற்றிலும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர். அதனால் பெரும்பாலான விவசாயிகள் இயந்திர மயமாக்கலுக்கு மாறினர். மனித உழைப்பினால் உற்பத்தி செய்யும் விவசாயங்களை விடுத்து இயந்திரத்தினால் செய்யப்படும் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.
இந்நிலையில், 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. இவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் நூறு நாள் வேலை திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்படும் என்றனர். இத்திட்டத்தில் ஊழல் மலிந்துள்ளதாக மத்திய தணிக்கை குழு கண்டு பிடித்தது.அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகள் கழிந்த பின்னர் அத்திட்டத்தில் சில மாறுதல்களை ஏற்படுத்தினர். நூறு நாள் வேலைக்கு வருபவர்கள், நீர் நிலைகள் தூர் வாரும் பணியை மட்டும் மேற்கொள்ளாமல், வீடு, கழிப்பிடம்கட்டுதல், நீர்நிலைகளை ஏற்படுத்த பண்ணைக் குட்டை ஏற்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்ள முறைப்படுத்தப்பட்டது.வீடு கட்டும் பணிக்காக செல்லும் தொழிலாளர்கள் அந்தந்த வீட்டின் உரிமையாளர்களிடம் இருந்தே சம்பளம் பெற வேண்டும். மற்ற பணிகளுக்கு வழக்கம் போல்அவரவர்கள் வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்படும். மத்திய அரசு இந்த திட்டத்தை மாற்றியமைத்த பின்னர் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 224 ரூபாய் வீதம்கூலி உயர்த்தப்பட்டது.
இத்திட்டத்தில், 2014- 15ம் ஆண்டில் 5.14 லட்சமாக இருந்த தொழிலாளர்கள், 2015- 16ம் ஆண்டில் 5.37 லட்சமாகவும், 2016 -17ல் 5.58 லட்சமாகவும்உயர்ந்தது. இத்திட்டம் புதிய வடிவில் பயனுள்ள முறையில் மாற்றி யமைக்கப்பட்ட பின்னர் 2017 -18 ல் 5.20 லட்சமாகவும், 2018- 19ம் ஆண்டில் 4.59லட்சமாகவும் குறைந்து வருகிறது. வரையறுக்கப்பட்ட பகுதியில் வேலை செய்தே ஆக வேண்டும் என்பதால் தொழிலாளர்கள் வேலைக்கு வர ஆர்வம்காட்டவில்லை.பணித்தள பொறுப்பாளர்கள் 'டீல்'அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும் நூறு நாள் வேலையை அப் பகுதியிலுள்ள பணித்தள பொறுப் பாளர்கள் தான் கணக்கீடு செய்கின்றனர். இவர்களை கண்காணிக்கவிரிவாக்க அலுவலர் உள்ளார். இவர்கள் கூட்டு சேர்ந்து வைப்பதுதான் சட்டமாகவுள்ளது. 
கிராமங்களில் வசதி படைத்த வர்களின் கார்டுகளை பதிவு செய்து, அவர்கள் வேலைக்கு வந்ததாக கணக்கு காட்டி, அவர்கள் சம்பளத்தில் பணித்தள பொறுப்பாளருக்கு 50 சதவீதமும், பயனாளிகளுக்கு 50 சதவீதமும் என 'டீல்' பேசி,பயனாளிகளை கணக்கு காட்டி வருகின்றனர். இவர்களை கண்காணிக்கும் அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை. இதனால் பணித்தள பொறுப்பாளர்களுக்கு வரும் வருவாயை பார்த்து, இப் பதவிக்கு வர அரசியல் கட்சிகள் சிபாரிசு பிடிக்கப்படுகிறது.தொலைதூர கிராம பகுதிகளில் நூறு நாள் வேலை திட்ட பணிகள் ஓரளவு முறையாகநடக்கின்றன. நகர பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ளவர்கள் கொத்தனார், பிளம்பர் என ஊதியம் அதிகம் கிடைக்கும் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. அதனால் இதுபோன்ற இடங்களில் போலி கார்டுகள்தான் அதிகம் புழக்கத்தில் உள்ளன. குறிப்பாக கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் போலி அட்டைகள் புழக்கம் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

Label