OUR CLIENTS
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழகத்தின் மேல்முறையீட்டு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழகத்தின் மேல்முறையீட்டு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் Posted on 07-Feb-2019 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழகத்தின் மேல்முறையீட்டு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி, ஜன.07-

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

மேலும் அனைத்து தரப்பினரும் தங்களது வாதத்தை வரும் திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்-க்கு எதிரான போராட்டத்தில் 13 பேரை பலி கொண்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து ஸ்ட்ரெலைட் நிர்வாகம் தொடுத்த வழக்கில் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 
இதனை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அரசு தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின்  உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் தான் வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடர முடியும் எனவும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர முடியாது எனவும் தெரிவித்தது. எனவே, ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டது. இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனமும் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேதாந்தா தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 
அதன்படி உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் பல நோய்கள் ஏற்படுவதாக வைகோ குறிப்பிட்டார். விதியை மீறி ஸ்டெர்லைட் ஆலை தாமிரத்தை அதிகம் உற்பத்தி செய்வதாகவும் வைகோ குற்றம் சாட்டினார். 
இன்று பிற்பகல் ஸ்டெர்லைட் வழக்கு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதனையடுத்து உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. மேலும் வரும் திங்கட்கிழமைக்குள் அனைத்து தரப்பினரும் தங்களது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Label