OUR CLIENTS
கூட்டணியால் கையில் கறை படிந்துவிடக் கூடாது: கமல்ஹாசன்
கூட்டணியால் கையில் கறை படிந்துவிடக் கூடாது: கமல்ஹாசன் Posted on 08-Feb-2019 கூட்டணியால் கையில் கறை படிந்துவிடக் கூடாது: கமல்ஹாசன்

கோவை, பிப்.08-

கூட்டணி விவகாரத்தில், எங்கள் கையில் கறை படிந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
பொள்ளாச்சியில் இரண்டு நாள்களாக நடைபெற்ற மக்கள் நீதி மய்ய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றேன். கட்சியின் கட்டமைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.  திமுகவுடன் கூட்டணி  கிடையாது என்று கூறியது உண்மைதான். நல்ல காரியங்களை முன்னெடுத்துச் செல்லும்போது, அவசரமாக கைகுலுக்கலில் ஈடுபட வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம்.
  அதேபோல, அதிமுகவுடனும் கூட்டணி இருக்காது. ஏனெனில், நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அவர்களை எதிர்த்து வந்துள்ளோம்.  அனைத்து தொகுதிகளிலும்  வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.  கூட்டணி விவகாரத்தில், எங்கள் கையில் கறை படிந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். ரஜினி, தனது மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ்  கொடுப்பதற்காகதான் அரசியல் கட்சியினரைப் பார்க்கச் சென்றுள்ளார். 
 இஸ்லாமிய திருமணத்தில், இந்து திருமண முறை குறித்து ஸ்டாலின் விமர்சித்திருக்கத் தேவையில்லை என்பதே என் கருத்து என்றார். 

Label