OUR CLIENTS
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்!
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்! Posted on 08-Feb-2019 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்!

வேலூர், பிப்.8-

நகர்புற மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.17.5லட்சம் சுழல் நிதி மற்றும் 25 சாலையோர வியாபாரி களுக்கு அடையாள அட்டை களை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வழங்கினார்.

வேலூர் மாவட்டத்தில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கங்களை திறம்பட ஊக்குவித்து வாழ்வா தாரத்தை மேம்படுத்திட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 01.02.2019 முதல் 15.02.2019 வரை வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நேற்று தமிழக அரசு நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலமாக நகர்புற மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கிட நடைமுறை படுத்தியுள்ளது. அதனடிப் படையில் நேற்று மகளிர் திட்ட அலுவலகம் 100 மகளிர் சுயயுதவிக்குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் விதம் 10 லட்சத்திற்கான சுழல் நிதியினையும், 15 நகர்புற மகளிர் கூட்டமைப்புகளுக்கு தலா 50 ஆயிரம் விதம் 7.5 லட்சத்திற்கான சுழல் நிதியினையும், வாணியம்பாடி நகராட்சியில் சாலை யோரமாக வியாபாரம் செய்து வரும் 25 நபர்களுக்கு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கி பேசியதாவது: நகர்புற மகளிர் சுய உதவிக் குழுக்களை மேம்படுத்தி நகர்புறத்தில் உள்ள பெண்கள் கடனுதவிகளை பெற்று தங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று வேலூரில் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிரூபவ் 16 பேரூராட்சி 11 நகராட்சி பகுதிகளில் உள்ள பெண்களை கொண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்து அதன்வாயிலாக சுழல் நிதி வங்கி தொழில் கடனுதவிகள் வழங்க மகளிர் திட்டம் வாயிலாக பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்ட ஊரக பகுதிகளில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் உள்ளது. 
இவற்றில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்கள் திறம்பட செயலாற்றி பல்வேறு சுயதொழில்கள் செய்து தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொண் டுள்ளனர். அதேபோல நகர்புறத்தில் 1200 க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் திறம்பட செயலாற்றி வருகிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் இன்னும் திறம்பட செயல்படவில்லை. இவர்களையும் மேலும் புதிய குழுக்களையும் திறம்பட செயலாற்றிட வைக்கும் விதமாக அனைத்து விதமான ஆய்வுகளையும் செய்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில்தான் சாலையோர வியாபாரி களுக்கு அடையாள அட்டை வழங்கி தொழில் செய்ய கடனுதவிகளை வங்கிகள் மூலம் வழங்கி வருகிறோம். 
இதுவரையில் வரப்பெற்ற 3600 மனுக்களில் 2400 நபர்களுக்கு ரூ.15 கோடி அளவில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வாணியம்பாடி நகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரி களுக்கு ரூ.25 லட்சம் வரையில் கடனுதவிகள் வழங்கப் படவுள்ளது. ஆகவே இன்றைய தினம் கடனுத விகளை பெறும் மகளிர் கடனுதவிகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் சிவராமன், உதவி திட்ட அலுவலர்கள் ஜெயகாந்தன், திருமேணி, ராமதாஸ், செந்தில்குமார், ரூபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Label