OUR CLIENTS
13 தொகுதிகளிலும் மாதிரி வாக்கு மையம்-ஆட்சியர் தகவல்!
13 தொகுதிகளிலும் மாதிரி வாக்கு மையம்-ஆட்சியர் தகவல்! Posted on 08-Feb-2019 13 தொகுதிகளிலும் மாதிரி  வாக்கு மையம்-ஆட்சியர் தகவல்!

வேலூர், பிப்.8-

வேலூர் மாவட்டத் திலுள்ள 13 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்படும் என்று ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள உதவும் விவி பேட் இயந்திரம் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு, நம்பகத்தன்மையை ஏற்படுத்த தொகுதிக்கு 10 பேர் வீதம் வேலூர் மாவட்டத்திலுள்ள 13 தொகுதிகளைச் சேர்ந்த 130 அலுவலர்களுக்கு நேரடி செயல்விளக்க பயிற்சி வகுப்பு வேலூரில் நடைபெற்றது. 
இந்த பயிற்சி முகாமை தொடங்கி வைத்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியது: எதிர்வரும் மக்களவைத் தேர்தலையொட்டி பொதுமக்களிடையே வாக்குப் பதிவு, விவி பேட் இயந்திரங்கள் குறித்து நம்பகத்தன்மை ஏற்படுத்தும் வகையில் சட்டப் பேரவை தொகுதி வாரியாக மாதிரி வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு 4 வாக்குச் சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு மாதிரி வாக்குப் பதிவு நடத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு இடத்திலும் 6 முதல் 7 குழுக்கள் ஏற்படுத்த வேண்டும். அதில், மூத்த அரசு அலுவலர், 2 உதவியாளர்கள், ஒரு காவலர் இடம்பெற வேண்டும்.
ஒவ்வொரு குழுவுக்கும் வாகன ஏற்பாடு செய்து அதில் மேஜை, நாற்காலிகள் கொண்டு சென்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொகுதிக்கு 7 வாகனங்கள் என 13 தொகுதி களுக்கு மொத்தம் 91 வாகனங்கள் இருத்தல் அவசியம். மாதிரி வாக்குச் சாவடியை அரசு அலுவலகம் அல்லது சமுதாயக் கூடங்களில் நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் தனியார் இடத்தில் நடத்தக் கூடாது. பணி முடிந்தவுடன் அவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டுமே சேர்க்க வேண்டும். வேறு தனியார் இடத்தில் வைத்தல் கூடாது. மாதிரி வாக்குப் பதிவு குறித்து சுவரொட்டிகள், பேனர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, வேலூர் மகளிர் திட்ட அலுவலர் சிவராமன், வேலூர் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஜெயம் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Label