OUR CLIENTS
அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்!
அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்! Posted on 08-Feb-2019 அரசு சட்டக் கல்லூரி  மாணவர்கள் மோதல்!

வேலூர், பிப்.8-

காட்பாடி அரசு சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் நடத்தப்பட்ட விழாவின்போது, இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

காட்பாடியில் உள்ள அரசினர் சட்டக் கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்கும் விதமாக வரவேற்பு நிகழ்ச்சி, விருந்து ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன. அப்போது, சீனியர் மாணவர்கள் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸார் கல்லூரிக்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர், கல்லூரி முதல்வர் சாந்தி, இருதரப்பு மாணவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, மாணவர்கள் மோதலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து அக்கல்லூரியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Label