OUR CLIENTS
பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி உறுதி ரங்கசாமி அறிவிப்பு
பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி உறுதி ரங்கசாமி அறிவிப்பு Posted on 08-Feb-2019 பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி உறுதி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி, பிப்.8-

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுவது உறுதி என்று ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச் சருமான ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்து 9-ம் ஆண்டை தொடங்கியுள்ளது. கட்சி தொடங்கிய 2 மாதத்தில் ஆட்சியை பிடித்தது. அதேபோல வரும் பாராளுமன்ற தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவும், வளர்ச்சி யடையவும் உதவியாக இருந்த அனைத்து மக்களுக்கும், பிற மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கும், தமிழகத்தை சேர்ந்த பிரமுகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வளர்ச்சி யடைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு பல நல்ல திட்டங்களை, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினோம். உள் கட்டமைப்பை வலுப்படுத் தினோம். மாணவர், இளைஞர், மீனவர், முதியோர், தொழிலாளர், அரசு ஊழியர், வர்த்தகர்கள் என அனைவருக்குமான திட்டங்களை நிறைவேற் றினோம். இதன்மூலம் புதுவை மாநிலமே பெரும் வளர்ச்சி பெற்றது. தொடர்ந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ரங்கசாமி அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் யார்?
பதில்: தகுந்த நேரத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றது போல ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொள்வோம். வரும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார்.
கே: பா.ஜனதா கூட்டணியில் நீங்கள் இடம்பெற்றுள்ளீர்களா?
ப: நாங்கள் கூட்டணியில் தான் உள்ளோம். கடந்த கால கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கே: அ.தி.மு.க., பா.ஜனதாவோடு சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இல்லையே?
ப: சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ராஜ்யசபா தேர்தலிலேயே அ.தி.மு.க. வுக்கு ஆதர வளித்தோம். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளரை ஆதரித்தோம், பிரச்சாரமும் செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Label