OUR CLIENTS
பயணிகளுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!
பயணிகளுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! Posted on 08-Feb-2019 பயணிகளுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

கும்மிடிப்பூண்டி, பிப்.8-

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே பயணிகளுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரயில் நிலையம் உள்ளது. கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரியும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்வதற்காக இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தையொட்டி உள்ள ஒரு கட்டடத்தில் டிக்கெட் முன்பதிவு கவுன்ட்டர் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர் ஆகியவை ஒன்றாக இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தின் அருகே அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்கள் மதுவை வாங்கி கடையையொட்டி சாலையோரம் உள்ள ரயில்வே இரும்பு தடுப்பில் அமர்ந்தும், டிக்கெட் கவுன்ட்டரின் வாசலில் அமர்ந்தும் மது குடித்து வருகின்றனர். மதுபிரியர்களுக்கென தற்காலிக சுண்டல், பஜ்ஜி, போன்டா கடைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மதுகுடித்து விட்டு போதை தலைக்கு ஏறியதும் அங்கு வரும் பெண் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசி கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர். கடந்த வாரம் குடிபோதையில் இருந்த ஆசாமி ஒருவர், அவ்வழியாக ரயிலில் இருந்து இறங்கி சென்ற பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நிகழ்ந்துள்ளது.
மேலும் சிலர் குடிபோதையில், முன்பதிவு மையத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டரில் போடப்பட்டு உள்ள நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு பயணிகளுக்கு தினமும் தொல்லை கொடுத்து வருகின்றனர். ரயில் நிலைய நடைமேடையிலும் மதுபிரியர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர். முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளும் குடிகாரர்களால் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையமும், டிக்கெட் கவுன்ட்டரும் தினமும் தள்ளாடுகிறது என்றே சொல்லலாம்.
இந்த மதுபிரியர்கள் ரயில் பயணிகளுக்கு மட்டுமன்றி அருகே உள்ள குடியிருப்புவாசிகளுக்கும் தொடர்ந்து பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட மதுக்கடையை இடம் மாற்றம் செய்யக்கோரி சமூக ஆர்வலர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 

Label