OUR CLIENTS
சீர் செய்யாத கால்வாய்!
சீர் செய்யாத கால்வாய்! Posted on 08-Feb-2019 சீர் செய்யாத கால்வாய்!

பூவிருந்தவல்லி, பிப்.8-

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோராஞ்சேரி ஊராட்சியில் பட்டாபிராமில் இருந்து திருவேற்காடு செல்லும் சாலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது. 

இதுநாள் வரையில் சுத்தம் செய்யப்படாமல் அவல நிலையில் இருந்து வந்தது.  இதை பற்றி பல முறை ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தும், புகார் தெரிவித்தும் எந்தவித பயனும் இல்லை. ஆனால் சுத்தம் செய்வதாக போலி பில் போட்டு பணத்தை சுருட்டி உள்ளனர். ஆனால் தற்போது மகாத்மா காந்தி ஊராக வளர்ச்சி திட்டத்தில் பணி புரியும் ஆட்கள் இந்த கால்வாய் மேல் உள்ள முள் புதர்களை அகற்றி வருகிறனர். தற்போதாவது இந்த கால்வாய் சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியுமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆதால்  இந்த பணி நடைபெறுமா ? அல்லது தொடர்ந்து கிடப்பில் போடப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Label