OUR CLIENTS
அற்புதமான பணியை செய்த நிதின் கட்கரி சோனியாகாந்தி பாராட்டு
அற்புதமான பணியை செய்த நிதின் கட்கரி சோனியாகாந்தி பாராட்டு Posted on 08-Feb-2019 அற்புதமான பணியை செய்த நிதின் கட்கரி  சோனியாகாந்தி பாராட்டு

புதுடெல்லி, பிப்.8-

நிதின் கட்காரி அற்புதமான பணியை செய்துள்ளார் என்று சோனியாகாந்தி பாராட்டினார், காங்கிரஸ் எம்.பி.க்களும் வரவேற்றனர்.

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தரப்பில் முன்னெடுக்கப்பட்ட பணிகள் மற்றும் இப்போது செய்யப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக விளக்கமான பதில் அளிக்கப்பட்டது. "எல்லா எம்.பி.க்களின் தொகுதிகளிலும் என்னுடைய அமைச்சகம் சிறப்பான பணியை செய்துள்ளது என்று அனைத்து எம்.பி.க்களும் கட்சி எல்லையைத்தாண்டி பாராட்டியுள்ளனர்," என்றார் நிதின் கட்கரி.
பா.ஜனதா உறுப்பினர்கள் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்ததற்கு மத்தியில் கட்கரி பேச்சை முடித்தார். அப்போது மத்திய பிரதேச மாநில எம்.பி. கணேஷ் சிங் எழுந்து நின்று, நிதின் கட்காரியின் அமைச்சகம் மேற்கொண்டுள்ள அற்புதமான பணிக்கு அவையில் பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டு இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மேஜையை தட்டி வரவேற்றார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்களும் பாராட்டை தெரிவிக்கும் வகையில் மேஜையை தட்டினர். 
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி சோனியா காந்தியின் தொகுதியாகும். அவருடைய தொகுதியில் மேற்கொண்ட சாலை பணிகளுக்கு நன்றி தெரிவித்து சோனியா காந்தி ஆகஸ்ட் மாதம் நிதின் கட்கரிக்கு நன்றி கடிதம் எழுதியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Label