OUR CLIENTS
கிளாம்பாக்கம் வரை விரிவடைகிறது மெட்ரோ ரயில் சேவை: பன்னீர்செல்வம் அறிவிப்பு
கிளாம்பாக்கம் வரை விரிவடைகிறது மெட்ரோ ரயில் சேவை: பன்னீர்செல்வம் அறிவிப்பு Posted on 08-Feb-2019 கிளாம்பாக்கம் வரை விரிவடைகிறது மெட்ரோ ரயில் சேவை: பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை, பிப்.08-

சென்னையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
நிதிநிலை அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, மீனம்பாக்கம் - கிளாம்பாக்கம் வரையில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் 118 கிலோ மீட்டர் நீளமுள்ள 3 வழித்தடங்கள் உருவாக்கப்படும். இந்த திட்டம் உருவாக்கப்பட்டால் மெட்ரோ ரயில் சேவை நிறைந்த பகுதிகளில் நீளம் 172.91 கி.மீ. ஆக அதிகரிக்கும். 
மாதவரம் - சோழிங்கநல்லூர், மாதவரம் - கோயம்பேடு பேருந்து நிலையம் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.2,681 கோடி ஒதுக்கப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்தார்.

Label