OUR CLIENTS
2020ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடியைத் தொட்டுவிடும்? ஓபிஎஸ் தகவல்
2020ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடியைத் தொட்டுவிடும்? ஓபிஎஸ் தகவல் Posted on 08-Feb-2019 2020ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடியைத் தொட்டுவிடும்? ஓபிஎஸ் தகவல்

சென்னை, பிப்.08-

தமிழகத்தின் 2019 - 2020 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று  தாக்கல் செய்தார்.

புதிய வரிகள் எதுவும் அறிவிக்கப்படாத பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. 
விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம், சென்னையில் வாகன நிறுத்துமிடத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு, மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்த அறிவிப்பு உள்ளிட்டவை இன்றைய நிதி நிலை அறிக்கையின் சிறப்பம்சங்களாக அமைந்தன.
ஆனால், கவலைகொள்ளும் விஷயம் என்னவென்றால், தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், 2019 - 20ம் நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.1,97,721 கோடியாக இருக்கும்.
அரசின் செலவினங்கள் ரூ.2,08,671 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருவாய் பற்றாக்குறை என்பது ரூ.10,950 கோடியாகவும், தமிழக அரசின் நிதி பறறாக்குறை என்பது ரூ.44.176 கோடியாகவும் இருக்கும் கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், கடந்த ஆண்டில் தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.3.55 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அதாவது 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.3 லட்சத்து 97,495.96 கோடியாக இருக்கும் என்று பன்னீர்செல்வம் கூறினார்.
எனவே, தமிழகத்தின் மொத்தக் கடன் இந்த நிதியாண்டில் சுமார 4 லட்சம் கோடியாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Label