OUR CLIENTS
முத்தலாக் தடை மசோதாவை ரத்து செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி: ஜேட்லி பதிலடி
முத்தலாக் தடை மசோதாவை ரத்து செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி: ஜேட்லி பதிலடி Posted on 09-Feb-2019 முத்தலாக் தடை மசோதாவை ரத்து செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி: ஜேட்லி பதிலடி

புதுடெல்லி, பிப்.09-

மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், முத்தலாக் தடை மசோதாவை ரத்து செய்வோம் என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை விமர்சித்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, நிக்கா ஹலாலா சம்பவங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

தில்லியில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு அமைப்பின் மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த கூட்டத்தில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் மசோதா ரத்து செய்யப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. 
இதை விமர்சித்து மத்திய அமைச்சர் ஜேட்லி முகநூலில் வெளியிட்ட பதிவில்,  உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் நிகழ்ந்த நிக்கா ஹலாலா சம்பவம் உள்பட ஊடகங்களில் வெளியாகும் நிக்கா ஹலாலா சம்பவங்கள் நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால் அது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அதிர்ச்சியடைய செய்யவில்லையா? 
32 ஆண்டுகளுக்கு முன்பு ஷா பானு வழக்கில், விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதை அப்போதைய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி நிறைவேற்றாமல் விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்களை ஆதரவற்றோராக விட்டு மிகப்பெரும் தவறிழைத்தார். தற்போது அவரது மகனும் அதுபோன்ற ஒரு தவறை செய்ய எண்ணுகிறார். பரேலியில் நிகழ்ந்த நிக்கா ஹலாலா சம்பவத்தில் அந்த பெண் விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டுள்ளார். தேர்தலில் மக்களின் ஆதரவு தேவைதான். எனினும் அதில் நியாயம் இருக்க வேண்டும். அரசியல் ஆதாயம் தேடுபவர்கள், நாம் கூறுவது அடுத்த நாள் காலையில் தலைப்புச் செய்தியாக வந்தால் போதும் என்று எண்ணுவார்கள். ஆனால் ஒரு நாட்டை கட்டமைப்பவர்கள் அடுத்த சந்ததியினரையும் மனதில் வைத்து முடிவெடுப்பர் என்று தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண்கள், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து(முத்தலாக்) பெற்ற பின், நிக்கா ஹலாலா நடைமுறையின்படி,  மீண்டும் அவரை நேரடியாக திருமணம் செய்துகொள்ள முடியாது. வேறொரு ஆணை திருமணம் செய்துகொண்டு, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகே முதல் கணவருடன் சேர முடியும். 
உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரால் இரு முறை விவாகரத்து செய்யப்பட்டார். அதன் பின்னர் கணவரின் தந்தையை ஒரு முறையும், மற்றொரு முறை கணவரின் சதோதரரையும் நிக்கா ஹலாலா முறைப்படி திருமணம் செய்து, பின்னர் தனது கணவருடன் இணைந்தார். இந்த செய்தி நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Label