OUR CLIENTS
நிதிநிலையை வலுப்படுத்துவது பெரும் சவால்: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
நிதிநிலையை வலுப்படுத்துவது பெரும் சவால்: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் Posted on 09-Feb-2019 நிதிநிலையை வலுப்படுத்துவது பெரும் சவால்: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, பிப்.09-

தமிழ்நாடு அரசின் 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவைக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

மாநிலத்தின் நிதி நிலைமையை வலுப்படுத்துவது சவாலாகவே உள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் வருவாய் பற்றாக்குறை உயர்ந்து வந்துள்ளது.  உதய் திட்டத்தின் கீழ் மாநில அரசு ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு மின் வாரியத்தின் ரூ.22 ஆயிரத்து 815 கோடி  கடன்,  ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையைச் செயல்படுத்தியது ஆகியவற்றுடன், வரிவருவாய் வரவில் ஏற்பட்ட தொய்வு, மத்திய அரசின் குறைவான நிதிப் பகிர்வு போன்றவையே வருவாய்ப் பற்றாக்குறை உயர்ந்து வருவதற்கான காரணங்கள்.
வரி விதிப்பு அதிகாரங்கள் குறைப்பு: சம்பளங்கள்,  ஓய்வூதியங்கள், வட்டி செலுத்துதல் ஆகிய பொறுப்புகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதுடன், மாநிலங்களிடம் இருந்த வரி விதிப்பு அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தின் நிதி நிலையை வலுப்படுத்துவது சவாலாகவே உள்ளது.
எனினும், வரும் ஆண்டுகளில் மாநிலம், உயர் வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரி வருவாய் உயரும் என்பதாலும், ஊதிய உயர்வு வழங்கியதால் ஏற்பட்ட நிதிச் சுமை ஓரளவு சமன் செய்யப்படும் நிலையிலும், வருங்காலத்தில் நிதிநிலை பராமரிப்பில் உறுதித் தன்மை ஏற்பட்டு வருவாய் பற்றாக்குறை படிப்படியாகக் குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
அதன்படியே, வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் வகுக்கப்பட்டுள்ள செயல் திட்டம், நீடித்த பொருளாதார வளர்ச்சியை மாநிலம் அடைவதற்கும், அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியைப் பெறுவதற்கும் வழிவகையை ஏற்படுத்தும் என்று தனது நிதிநிலை அறிக்கையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Label