OUR CLIENTS
ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு Posted on 09-Feb-2019 ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

சென்னை, பிப்.09-

மக்களவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். 

மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.
காவல் அதிகாரிகள் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்து, பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே பணியிட மாற்றம் செய்த அதிகாரிகளின் விவரங்களை தரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label