OUR CLIENTS
காலச்சக்கரம் செய்தி எதிரொலி! அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் உணவு கட்டுப்பாட்டு அலுவலர் சோதனை!
காலச்சக்கரம் செய்தி எதிரொலி! அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் உணவு கட்டுப்பாட்டு அலுவலர் சோதனை! Posted on 09-Feb-2019 காலச்சக்கரம் செய்தி எதிரொலி! அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் உணவு கட்டுப்பாட்டு அலுவலர் சோதனை!

வேலூர், பிப்.9-

காலச்சக்கரம் நாளிதழில் காட்பாடி அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் உணவு கட்டுப்பாட்டு அலுவலர் சோதனை நடத்தி உரிமம் இல்லாமல் கடை நடத்தியதற்கு பிரிவு 63ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அத்துடன் சோதனையில் நாட்பட்ட மீன்களை கைப்பற்றி அழித்தார்.

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில் பி.அப்து பிரதர்ஸ் மீன் அங்காடி செயல்பட்டு வருகிறது. அத்துடன் வேலூர் அசரத் மக்கான் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட்டிலும் மீன் கடை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் இந்த பி.அப்து பிரதர்ஸ். இவர்கள் வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் மீன் கடைகளை வைத்து கொண்டு கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். அத்துடன் நாட்பட்ட மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். மீன் என்ற பெயரில் அழுகிய மீன்களை  நுகர்வோர் தலையில் கட்டி அனுப்புகின்றனர் இந்த திறமைசாலிகள். 
இங்கு விற்பனையாகும் மீன்களின் செவுல் எதுவும் சிவப்பாக இருக்காது. மாறாக வெளிரிய நிறத்திலேயே இருப்பதை நுகர்வோர் பலரும் பார்த்துள்ளனர். இதை யாராலும் மறுக்க முடியாது. மீனை தொட்டு பார்த்தால் வாடிக்கையாளர்களை பார்த்து மீன்களை தொடக்கூடாது, அடிக்கடி தொட்டால் மீன் நொந்து போகும் என்று அடாவடியாக நுகர்வோரிடம் சண்டையிடுகின்றனர். கேரள மாநிலம், கன்னியாகுமரி உள்ளிட்ட வெகு தொலைவில் இருந்து மீன்களை கொண்டு வந்து விற்பனை செய்து பணமாக்கி விடுகின்றனர் இந்த பி.அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியினர். இதனால் நுகர்வோர் பலர் வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில் Ôகாலச்சக்கரம் நாளிதழ்Õ நுகர்வோர் நலனில் அக்கரை கொண்டு கடந்த 7ம் தேதி 10ம் பக்கத்தில் விரிவாக செய்தி வெளியிட்டது. இதனடிப்படையில் நுகர்வோர் நலனில் அக்கரை கொண்டு உணவு கட்டுப்பாட்டு அலுவலர் [திஷிளி] கந்தவேல் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். 
7ம் தேதி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பி.அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் அதிரடி சோதனை நடத்தினார். அப்போதுதான் இந்த பி.அப்து பிரதர்ஸ் கடைக்கு மீன் விற்பனை செய்ய முறையான உரிமம் இல்லை [ழிஷீ ஸ்ணீறீவீபீ றீவீநீமீஸீ௳மீ] என்பது வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. இதனால் அந்த கடைக்கு ஷிமீநீ 63ன் கீழ் நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளார் உணவு கட்டுப்பாட்டு அலுவலர் கந்தவேல். அத்துடன் நாட்பட்ட கெட்டுப்போன அழுகிய 5 கிலோ மீன்களை கைப்பற்றி அழித்தார். 
இதனால் நுகர்வோர் காலச்சக்கரம் நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த உணவு கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கும் தனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். இதே போன்று தரமற்ற உணவுகளை விற்கும் வியாபாரிகளை அடையாளம் கண்டு நடிவக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் விடுத்துள்ளனர். 

Label