OUR CLIENTS
மொரட்டாண்டி சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க பிப்.20 வரை தடை!
மொரட்டாண்டி சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க பிப்.20 வரை தடை! Posted on 09-Feb-2019 மொரட்டாண்டி சுங்கச் சாவடியில்  கட்டணம் வசூலிக்க பிப்.20 வரை தடை!

விழுப்புரம், பிப்.9-

புதுச்சேரி அருகேயுள்ள மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் வாகனங் களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க பிப்ரவரி 20-ஆம் தேதி வரை தடை விதித்து வானூர் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சேரி அருகே மொரட்டாண்டியில் சங்கச் சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடி, விதிகளை மீறி புதுச்சேரிக்கு மிக அருகில், விழுப்புரம் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ளது என்று வானூர் பகுதி தேர்குணம் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் வானூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அண்மையில் மனு  தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அரசு அறிவிப்பின்படி தற்போது மொரட்டாண்டியில் இயங்கிவரும் சுங்கச்சாவடி புதுச்சேரி எல்லையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனால் புதுச்சேரியிலிருந்து 10 கி.மீ. தொலைக்கு அப்பால்  அமைத்திருக்க வேண்டும். அதாவது புளிச்சப்பள்ளம் கிராமத்தையொட்டி அமைத் திருக்க வேண்டும்.  ஆகவே விதிகளை மீறி செயல்பட்டு வரும் மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.  மனுவை வியாழக்கிழமை விசாரித்த மாவட்ட உரிமையியல் நீதிபதி வெங்கடேசன் வருகிற 20-ஆம் தேதி வரை எந்த வாகனங்களுக்கும் மொரட்டாண்டி சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தரவிட்டார்.

Label