OUR CLIENTS
கருவூல உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
கருவூல உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் Posted on 31-Aug-2016 கருவூல உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கருவூலத்தில் 3 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக கருவூலக் கணக்குத் துறை மூலம் திருவள்ளூர் மாவட்ட கருவூலத்தில் 3 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர்.

விண்ணப்பதாரர்கள், அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட வயது வரம்புக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 8-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்கள் தவிர) 32 வயதுக்குள்ளும், பொதுப் பிரிவினர் 30 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட கருவூலத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

Label