OUR CLIENTS
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் திருவுருவப் படம் நாளை திறந்துவைப்பு
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் திருவுருவப் படம் நாளை திறந்துவைப்பு Posted on 11-Feb-2019 நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் திருவுருவப் படம் நாளை திறந்துவைப்பு

புதுடெல்லி, பிப்.11-

முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் திருவுருவப் படம் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் செவ்வாய்கிழமை (பிப்.12) திறந்து வைக்கப்பட உள்ளது.

 காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இணை அமைச்சர் விஜய் கோயல், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாஜ்பாயின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
 வாஜ்பாயின் உருவப்படத்தை அவருடன் பல ஆண்டுகள் இணைந்து செயல்பட்ட "லோக் அபியான்' எனும் இயக்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது.

Label