OUR CLIENTS
பட்டாசு ஆலையை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் இன்று முதல் 3 நாள்கள் தொடர் போராட்டம்
பட்டாசு ஆலையை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் இன்று முதல் 3 நாள்கள் தொடர் போராட்டம் Posted on 11-Feb-2019 பட்டாசு ஆலையை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் இன்று முதல் 3 நாள்கள் தொடர் போராட்டம்

சிவகாசி, பிப்.11-

பட்டாசு ஆலையை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 3 நாள்கள் தொடர் போராட்டம் நடைபெற உள்ளது.

 பட்டாசு ஆலை உரிமையாளர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள், வேதியியல் பொருள்கள் விற்பனையாளர்கள், லாரி செட் உரிமையாளர்கள் உள்ளிட்டோரை கொண்டு பட்டாசுத் தொழில்- பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வேலை இழந்துள்ள பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிவராணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பட்டாசுத் தொழிலைப் பாதுகாப்போம், கலாச்சாரத்தைப் பாதுகாப்போம், சிவகாசியை பாதுகாப்போம் என்ற கோஷத்துடனும் இப்போராட்டம் நடைபெற உள்ளது.
 சிவகாசி - திருத்தங்கல் சாலையில் குறுக்குப்பாதை பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள மைதானத்தில் இப்போராட்டம் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறும் . இதில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Label