OUR CLIENTS
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை தில்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம்
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை தில்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம் Posted on 11-Feb-2019 ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை தில்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம்

புதுடெல்லி, பிப்.11-

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, அந்த மாநில முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தில்லியில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.

 இதுதொடர்பாக ஆந்திர அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும், ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தில்லியில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவிருக்கிறார். ஆந்திர பவனில் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை இப்போராட்டம் நடைபெறவுள்ளது. இதில், மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள், மாநில அரசு ஊழியர் சங்கம், மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
 உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன், ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்திலும், ஆந்திர பவனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் முதல்வர் மரியாதை செலுத்த உள்ளார்.
 உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை செவ்வாய்க்கிழமை சந்தித்து, முதல்வர் மனு அளிக்க உள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 முன்னதாக, இதே கோரிக்கையை முன்வைத்து, விஜயவாடாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி தனது பிறந்த தினத்தன்று சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.
 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாக கூறி, கடந்த ஆண்டு கூட்டணியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Label