OUR CLIENTS
சாலை பாதுகாப்பு விழா!
சாலை பாதுகாப்பு விழா! Posted on 11-Feb-2019 சாலை பாதுகாப்பு விழா!

சென்னை, பிப்.11-

கொடுங்கையூரில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார்  30வது சாலை பாதுகாப்பு விழாவை எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில்  நடத்தினர். 

இதில் சென்னை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர்ஜார்ஜ், புளியந் தோப்பு போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சுந்தர்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், சென்னை வடக்கு வட்டார மோட்டார் வாகன அலுவலர் அசோக்குமார், ஆய்வாளர்கள் ஆனந்தன், ஜெயலட்சுமி, சிறப்பு விருந்தினர் கோ.கோகுலராமன்,  சீலம் ரவி ஆகியோர் கலந்துகொண்டனர். சாலையில் மோட்டார் சைக்கிள்  ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை நிறுத்தி அவர்களுக்கு இலவசமாக பெண்களுக்கும், ஆண்களுக்கும் 50க்கும் மேற்பட்ட ஹெல்மெட்டுகளை வழங்கினர்.

Label