OUR CLIENTS
மின் வாரியத்தில் வேலை தேர்தலுக்கு முன் அறிவிப்பு?
மின் வாரியத்தில் வேலை தேர்தலுக்கு முன் அறிவிப்பு? Posted on 11-Feb-2019 மின் வாரியத்தில் வேலை  தேர்தலுக்கு முன் அறிவிப்பு?

சென்னை, பிப்.11-

தமிழ்நாடு மின் வாரியத்தில் கள உதவியாளர், கம்பியாளர் பிரிவில் 22 ஆயிரத்து 500 காலி பணியிடங்கள் உள்ளன.

இதனால் தற்போது உள்ள ஊழியர்கள் கூடுதல் பணிச்சுமையால் சிரமப்படுகின்றனர்.இதையடுத்து கள உதவியாளர் பிரிவில் 2,900, இளநிலை உதவியாளர் கணக்கு பிரிவில் 500 பதவிகளை நிரப்ப மின் வாரியம் முடிவு செய்தது. 
இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து மின் வாரியமும் ஆணை வெளியிட்டது. இருப்பினும் காலி பணியிடங்களை நிரப்ப இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் இம்மாத இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் வெளியிட உள்ளது.
தேர்தல் அறிவிப்பு வந்ததும் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். அப்போது அரசு துறைக்கு ஆட்கள் தேர்வு புதிய திட்டங்கள் போன்றவை தேர்தல் கமிஷன் அனுமதி இல்லாமல் மேற்கொள்ள முடியாது. அதற்கு இடம் தராமல் 3,400 பதவிக்கு ஆட்களை தேர்வு செய்யும் அறிவிப்பை மின் வாரியம் உடனே வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு பட்டதாரிகளிடம் எழுந்துள்ளது.
மின் வாரியம் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு எலக்ட்ரிகல் பிரிவில் 500, மெக்கானிக்கல் பிரிவில் 25 இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய தற்போது அவர்களுக்கான நேர்காணல், இன்று முதல் 15ம் தேதி வரை சென்னை, கிண்டி, அண்ணா பல்கலை வளாகத்தில் நடக்கிறது. இன்று நேர்காணல் மின் வாரியம், தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் எலக்ட்ரிகல் பிரிவில் 500, மெக்கானிக்கல் பிரிவில் 25 இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய 2016ல் எழுத்து தேர்வு நடத்தியது. 
ஆனால் நீதிமன்ற வழக்கால் நேர்காணல் நடத்தவில்லை. தற்போது அவர்களுக்கான நேர்காணல் இன்று முதல் 15ம் தேதி வரை சென்னை, கிண்டி, அண்ணா பல்கலை வளாகத்தில் நடக்கிறது. தகுதியானோருக்கு இதற்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

Label