OUR CLIENTS
விரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்
விரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் Posted on 11-Feb-2019 விரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி இந்தியாவில் நோட் 7 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்தியாவில் ரெட்மி நோட் சீரிஸ் அதிக பிரபலமாக இருக்கிறது. சமீபத்தில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவைத் தொடர்ந்து ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி எனும் தனி பிராண்டு மூலம் இந்தியா வரும் முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 7 இருக்கும்.
இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் சாம்சங் எம் சீரிஸ் போன்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது. இத்துடன் அசுஸ் நிறுவனத்தின் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனும் போட்டியாக இருக்கும்.
இத்துடன் முந்தைய ரெட்மி நோட் 5 சீரிஸ் போன்று ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனையும் சியோமி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8 லென்ஸ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் போர்டிரெயிட் மோட் வழங்கப்பட்டிருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல், வாட்டர் டிராப் ரக நாட்ச், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. யு.எஸ்.பி. டைப்-சி வசதி கொண்டிருக்கும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் குவால்காமின் க்விக் சார்ஜ் 4.0 தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.

Label