OUR CLIENTS
12 செயற்கை கோள்களை ஏவ இந்தியாவை நாடும் அமெரிக்கா: இஸ்ரோ உயர் அதிகாரி தகவல்
12 செயற்கை கோள்களை ஏவ இந்தியாவை நாடும் அமெரிக்கா: இஸ்ரோ உயர் அதிகாரி தகவல் Posted on 31-Aug-2016 12 செயற்கை கோள்களை ஏவ இந்தியாவை நாடும் அமெரிக்கா: இஸ்ரோ உயர் அதிகாரி தகவல்

டெல்லி:
இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோ நிறுவனம், இந்தியாவின் செயற்கை கோள்களை மட்டுமின்றி வெளிநாடுகளின் செயற்கை கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.


இதன் மூலம் இஸ்ரோ நிறுவனத்துக்கு வணிக ரீதியில் கணிசமான அளவுக்கு வருவாய் கிடைக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளில் வெளிநாடுகளின் 74 செயற்கை கோள்களை இஸ்ரோ நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பெல்ஜியம், பிரான்சு, ஜெர்மனி, இஸ்ரேல் நாடுகள் இஸ்ரோ உதவியால் பல செயற்கை கோள்களை விண்ணுக்கு செலுத்தி உள்ளன.

அந்த வரிசையில் தற்போது பல வெளிநாடுகள் தங்களது 68 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்தை நாடியுள்ளன. இஸ்ரோ நிறுவனம் செயற்கை கோள்களை விண்ணில் ஏவ பயன்படுத்தும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மீது உள்ள நம்பிக்கை காரணமாக இஸ்ரோவுக்கு இந்த வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளன.

வரும் ஆண்டுகளில் 12 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இந்தியாவின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. வெளி நாடுகளின் வருகை அதிகரிப்பால் இஸ்ரோவுக்கு கிடைக்கும் வருமானம் உயர்ந்துள்ளது.

இஸ்ரோ நிறுவனம் கடந்த மாதம் ஒரே ஒரு பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 20 செயற்கை கோள்களை பறக்க விட்டு சாதனை படைத்தது. அதை முறியடிக்க 25-க்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது தவிர அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 2500 செயற்கைகோள்களை தயாரிக்கவும், இஸ்ரோ முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது. இந்த தகவல்களை இஸ்ரோவின் அண்ட்ரிக்ஸ் நிறுவன சேர்மனும், நிர்வாக இயக்குனருமான ராகேஷ் சசிபு‌ஷன் தெரிவித்துள்ளார்.

Label