OUR CLIENTS
காவல் நிலைய வளாகத்தில் நரிக்குறவர் இன இளம் பெண் தற்கொலை முயற்சி!
காவல் நிலைய வளாகத்தில் நரிக்குறவர் இன இளம் பெண் தற்கொலை முயற்சி! Posted on 13-Feb-2019 காவல் நிலைய வளாகத்தில் நரிக்குறவர்  இன இளம் பெண் தற்கொலை முயற்சி!

வேலூர், பிப்.13-

ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலைய வளாகத்தில் நரிக்குறவ இன இளம்பெண் விஷ மருந்து தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

வாலாஜாப்பேட்டையை அடுத்த அணைக்கட்டு நரிக்குறவ காலனியைச் சேர்ந்தவர் கோவை சரளா (18 ). அவரும் உறவினரான பூவரசன் (24) என்பவரும் கடந்த நான்கு ஆண்டு காலமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், கோவை சரளாவைத் திருமணம் செய்ய மறுத்து  பூவரசன் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவை சரளா தனது பெற்றோருடன் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு  வந்து பூவரசனுடன் திருமணம் செய்து வைக்கக் கோரி புகார் அளித்தார். அதன் பேரில் மகளிர் காவல் நிலையத்துக்கு இரு தரப்பு உறவினர்களை அழைத்து சமாதானம் பேசினர். அப்போது பூவரசன் திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்தார். 
இதனால் மனமுடைந்த கோவை சரளா ஏற்கெனவே தயாராக வைத்திருந்த கொக்கு மருந்தைத் தின்று தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த போலீஸார் மற்றும் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து சிகிச்சைக்காக வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Label