OUR CLIENTS
15-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
15-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்! Posted on 13-Feb-2019 15-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

வேலூர், பிப்.13-

வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் நாள் கூட்டம் வேலூரில் வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகளின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிய உள்ளனர். அத்துடன், கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் வேலூர் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகள், கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம். இந்த தகவலை வேலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது என மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Label