OUR CLIENTS
அரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக ஒலிக்கும் மணியோசை!
அரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக ஒலிக்கும் மணியோசை! Posted on 15-Feb-2019 அரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக ஒலிக்கும் மணியோசை!

திருச்சி, பிப்.15-

வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக மணியோசை ஒலிக்கப்படுகிறது. 

இதனால் உடல்நலத்தை காக்கும் வகையில் மாணவர்கள் தினமும் தண்ணீர் குடிப்பதை பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள கருங்குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நூலகம் ஒன்று நீண்ட நாட்களாக செயல்படாமல் பாழடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் அந்தோணி லூயிஸ் மதியாஸ் முயற்சியால் நூலகத்தை சுத்தம் செய்து புதிய நூல்களை வாங்கி வந்து மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு மீண்டும் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு நாளேடுகளும் வாங்கி வைக்கப்படுகின்றன. இதனால் மாணவ மாணவிகள் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்கின்றனர். மேலும் நூலகத்தில் படித்த நூல்களில் பிடித்ததை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
மேலும் நமக்கு தேவையான குடிநீரை மாணவர்கள் தினமும் குறிப்பிட்ட அளவில் குடிக்க வேண்டும் என்பதை மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் தண்ணீர் குடித்து உடல்நலத்தை காக்கும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவ, மாணவிகள் தண்ணீர் பாட்டில்களை எடுத்து வந்து குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தண்ணீர் குடிப்பதற்கு தனியாக மணி ஒலிக்கப்படுகிறது. அப்போது மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்தபடியே தண்ணீர் குடித்துக் கொள்கின்றனர். மேலும் இதேபோன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களும் சமூக நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்னனர்

Label