OUR CLIENTS
பாகிஸ்தானைக் கண்டித்து ரிச்சி தெருவில் கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாகிஸ்தானைக் கண்டித்து ரிச்சி தெருவில் கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted on 16-Feb-2019 பாகிஸ்தானைக் கண்டித்து ரிச்சி தெருவில் கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, பிப்.16-

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில் பாகிஸ்தானைக் கண்டித்து சென்னை ரிச்சி தெருவில் கடைகளை அடைத்து அதன் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டும், பாகிஸ்தானைக் கண்டித்தும் சென்னை ரிச்சி தெருவில் கடைகள் அடைக்கப்பட்டது.
அத்தெருவில் உள்ள பிறரையும் கடைகளை அடைத்து போராட்டத்துக்கு அழைத்தனர்.  ரிச்சி தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பேரணி மேற்கொண்டனர். அப்போது பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வலியுறுத்தி அவர்கள் முழக்கம் எழுப்பினர். 

Label