OUR CLIENTS
21 குண்டுகள் முழங்க புல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் விளைநிலத்தில் விதைக்கப்பட்டது
21 குண்டுகள் முழங்க புல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் விளைநிலத்தில் விதைக்கப்பட்டது Posted on 16-Feb-2019 21 குண்டுகள் முழங்க புல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் விளைநிலத்தில் விதைக்கப்பட்டது

கயத்தாறு, பிப்.16-

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சுப்பிரமணியன் உடல் தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரி கிராமத்தில் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள சவலாப்பேரி கிராமம், மேலத்தெருவை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன்(30) வீரமரணம் அடைந்தார்.
இவர் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வீரராக பணியாற்றினார். இவருக்கு கிருஷ்ணவேணி(23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
அங்கு சுப்பிரமணியன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். அப்போது, தமிழக அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அரசு பணி நியமன உத்தரவை துணை முதல்-அமைச்சர் அளித்தார். 
சவலாப்பேரி கிராமத்தை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சவலாப்பேரி கிராமத்திற்கு திரண்டு வந்து சுப்பிரமணியன் படத்தை அலங்கரித்து வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சுப்பிரமணியன் உடல் வீட்டின் அருகாமையில் உள்ள அவரது குடும்பத்துக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. 
அங்கு மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் காவல் துறை உயரதிகாரிகளும், அரசு உடரதிகாரிகளும் சுப்பிரமணியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மாலை சரியாக 6.15 மணியளவில் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் சுப்பிரமணியனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Label