OUR CLIENTS
கடலூர் நகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பு!
கடலூர் நகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பு! Posted on 19-Feb-2019 கடலூர் நகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பு!

கடலூர், பிப்.19-

 கடலூர் நகராட்சியில் நிலவும் நிதி நெருக்கடியால், பல்வேறு பணிகள் தொடர்ந்து செய்ய முடியாமல் பாதியில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூர் பெருநகராட்சியில் கடலூர் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர் . மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், செம்மண்டலம் உள்ளிட்ட 45 வார்டுகள் உள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில், கடலூர் நகராட்சி தேர்வு செய்யப்பட்டது.இதன் மூலம் அம்ரூத் திட்ட தொகை நகராட்சிக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.
கடலூர் அண்ணாநகரில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நடந்து வந்த பூங்கா பணி நிதி வழங்காததால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு, நகராட்சியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதன்ஒரு பகுதியாக, கடலூர் நகரை அழுகுபடுத்தும் திட்டத்தில்,நகரின் முக்கிய பகுதிகளில், 10 இடங்களில் பூங்காக்கள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது.இத்திட்டத்தில், கடலூர் முதுநகர் காந்தி பூங்கா, செல்லாங்குப்பம், வண்டிப்பாளையம் சரவணா நகர், தங்கராஜ் நகர், பத்மாவதி நகர், சிங்காரவேல் நகர், தீபன் நகர், அண்ணா நகர், காமராஜர் நகர் என, நகரில் மொத்தம் 10 இடங்களில் பூங்காஅமைப்பதற்கு ரூ.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வந்தது.அம்ரூத் திட்டத்திலிருந்து இதுவரை 2 கோடி ரூபாய் கான்ட்ராக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
3 கோடி ரூபாய் அளவிற்கு வழங்க வேண்டியுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக நகராட்சி நிர்வாகம் இதற்கான தொகையை வழங்காமல் உள்ளது.
இதனால் பூங்கா பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு, முடிவடையாமல் உள்ளது. மேலும் இந்த பூங்காக்களில் நகராட்சி சார்பில், இயற்கை உரம் தயாரிக்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.கடலூர் நகராட்சியில் வரி வருவாய் 20 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி உள்ளது. இவற்றை முறையாக வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொது நிதியிலிருந்து நடக்க வேண்டிய பணிகள் நடக்காமல் உள்ளது. திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும் முறையாக செலவிடப்படாததால், பொது நிதியிலிருந்து செய்யப்பட்ட பணிகளுக்கு வழங்கவேண்டிய பாக்கி தொகை 7 கோடி ரூபாயும், திட்டப்பணிகளுக்கான4.50 கோடி ரூபாயும் ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கியுள்ளதால், எந்த பணியும் முழுமை பெறாமல் பாதியில் நிற்கிறது. மேலும், முறையாக வரிவசூல் செய்யப்படாததால் ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கே பணம் இல்லாமல் நிதி நெருக்கடியில் நகராட்சி சிக்கித்தவித்து வருகிறது.

Label