OUR CLIENTS
பெண்கள் மட்டுமே டிக்கெட் பரிசோதகர்கள்!
பெண்கள் மட்டுமே டிக்கெட் பரிசோதகர்கள்! Posted on 19-Feb-2019 பெண்கள் மட்டுமே டிக்கெட் பரிசோதகர்கள்!

கோயம்புத்தூர், பிப். 19- 

பெண் டிக்கெட் பரிசோதகர்களை மட்டுமே கொண்டுள்ள கோவை- பெங்களூரு ‘டபுள் டெக்கர்’ உதய் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது.

கோயம்புத்தூரிலிருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ‘டபுள் டெக்கர்’ (இரண்டடுக்கு) ரயில் சேவை 2018 ஜூன் 8-ம் தேதி தொடங்கியது. இந்த ரயில் திங்கள்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 5.45 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு (கே.எஸ்.ஆர்) ரயில் நிலையத்தை பகல் 12.40 மணியளவில் சென்றடைகிறது. மறுமார்க்கமாக பகல் 2.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணியளவில் கோவை வந்தடைகிறது. கோவையிலிருந்து பெங்களூருவுக்கு ரூ.610, திருப்பூரிலிருந்து ரூ.565, ஈரோட்டிலிருந்து ரூ.520, சேலத்திலிருந்து பெங்களூருவுக்கு ரூ.450 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
எடை குறைந்த, பாதுகாப்பான எல்எச்பி பெட்டிகள், முழுவதும் குளிரூட்டப்பட்ட சொகுசு இருக்கைகள், உணவருந்த ‘டைனிங்’ பகுதி, கண்கவரும் உட்புற அமைப்பு, எல்சிடி திரைகள் மூலம் ரயில் சென்றுகொண்டிருக்கும் வேகம், எஞ்சியுள்ள தூரம், எவ்வளவு நேரத்தில் அடுத்த ரயில் நிலையத்தை சென்றடையும் ஆகிய விவரங்களை ஜிபிஎஸ் உதவியுடன் அறிந்துகொள்ளும் வசதி ஆகியவை இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளன.

Label