OUR CLIENTS
பாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு
பாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு Posted on 19-Feb-2019 பாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை, பிப்.19-
            பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  
        பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன. ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் சேருவது உறுதி ஆனது.  
            இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக கூட்டணியை அறிவிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வந்த அமித் ஷாவின் கூட்டணி இறுதி பேச்சுவார்த்தைக்காக அமித் ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை வருவதாக இருந்த பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு அமித் ஷா தற்போது மகாராஷ்டிராவில் இருந்து டில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். 
        அமித் ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்தகட்ட பரபரப்பாக, சென்னை தியாகராய நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் பாமக நிறுவனர் ராமதாசுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ், மக்களவை உறுப்பினர் அன்புமணி ஆகியோர் கிரவுன் பிளாசாவுக்கு வருகை தந்தனர். முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோரும் கிரவுன் பிளாசாவுக்கு வருகை தந்தனர்.
        இதில் முதல்கட்டமாக அதிமுக-பாமக இடையே  இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாமக தலைவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. 
    இதையடுத்து இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.  21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என்றும்,  இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.  
        அ.தி.மு.க.- பா.ம.க. தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-  எங்கள் கூட்டணி மக்கள் கூட்டணி. மெகா கூட்டணியாக உருவாகி இருக்கிறது. இது வெற்றிக் கூட்டணி. புதுவை உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை நீங்கள் அறிவீர்கள். இப்போது அ.தி.மு.க.வுடன் பா.ம.க. இணைந்துள்ளது. எதற்காக இந்த கூட்டணியில் இணைந்துள்ளேன் என்பதை தமிழக மக்களுக்கு தனி அறிக்கையில் விளக்கி உள்ளேன்.  இது தொடர்பாக நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் சொல்வார். தமிழக மக்களின் நலன்களை காக்கவும், உரிமைகளை மீட்கவும் 10 கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.  இந்த கோரிக்கைகளை இரண்டு கட்சியினரும் ஏற்றுள்ளோம். அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.  
பாமக போட்டியிடும் 7 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
        இதையடுத்து மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

அதிமுக - பாமக மக்களவை பொதுத் தேர்தல் கூட்டணி உடன்படிக்கை


Label