OUR CLIENTS
புல்வாமா தாக்குதலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் நடந்த குளறுபடிகளே காரணம் காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு
புல்வாமா தாக்குதலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் நடந்த குளறுபடிகளே காரணம் காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு Posted on 19-Feb-2019 புல்வாமா தாக்குதலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் நடந்த குளறுபடிகளே காரணம் காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

புதுடில்லி, பிப்.19-

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் நடந்த குளறுபடிகளே காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி  இனி தான் கூறியதை செயல்படுத்தி காட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இந்த தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் மத்திய அரசுக்கு எதிராக எந்த கருத்தையும் கூறாமல் தவிர்த்தது. சில நாட்களுக்கு இதைபற்றி விவாதிக்க போவதில்லை என்று பிப்ரவரி 16ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் முதல் முதலாக   மத்திய அரசை விமர்சித்து இன்று செய்தி வெளியிட்டது.  புல்வாமா தாக்குதல் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் ‘‘புல்வாமா தாக்குதலுக்கு பின் காங்கிரஸ் மிகவும் பொறுமையாகவும் பொறுப்பாகவும் செயல்பட்டு வருகிறது’’

‘‘2014ம் ஆண்டுக்கு முன் நாட்டில் நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கை பதவி விலகும்படி பாஜக வலியுறுத்தியது. ஆனால் யூரி தாக்குதல், நாடாளுமன்றம் தாக்குதல் மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பின் காங்கிரஸ் அதுபோன்ற கோரிக்கையை எழுப்பவில்லை’’.  ‘‘ஆனால் புல்வாமா தாக்குதலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் நடந்த குளறுபடிகளே காரணம் என்பதில் சந்தேகமில்லை. 2500 வீரர்களை 78 வாகனங்களில் ஒரே நேரத்தில் அனுப்பியது. அதேசமயம் பொதுமக்கள் வாகனங்கள் செல்லவும் அனுமதி அளித்தது. ஜெய்ஷ் -இ - முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்ற புலனாய்வு தகவலை புறக்கணித்தது. இது போன்ற பாதுகாப்பு குளறுபடிகளால் தான் இந்த தாக்குதல் நடைபெற்றது. கவனமாக இருப்பதற்கான அர்த்தம் இதுதானா?’’ என்று அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.  மற்றொரு காங்கிரஸ் தலைவரான கபில் சிபல் கூறுகையில்  ‘‘பிரதமர் மோடி அவர்களே நீங்கள் பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்துவிட்டது என கூறினீர்கள். அது உண்மைதான். நீங்கள் கூறியதை இனி செயலில் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Label