OUR CLIENTS
அதிமுக - பாமக கூட்டணி: திமுக தலைவர் ஸ்டாலின் கடும் விமர்சனம்
அதிமுக - பாமக கூட்டணி: திமுக தலைவர் ஸ்டாலின் கடும் விமர்சனம் Posted on 19-Feb-2019 அதிமுக - பாமக கூட்டணி: திமுக தலைவர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

வேலூர், பிப்.19-

அதிமுக - பாமக கூட்டணி ஏற்கெனவே 2009ல் மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.  வரும் நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக சந்திக்கிறது.  இன்று, இதுதொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 7 தொகுதிகளுடன் 1 மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பேச்சு வார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்து உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக - பாமக கூட்டணியை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.  வேலூர் அருகே ஆம்பூரில் திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி பாமக-அதிமுக கூட்டணி.  அதிமுகவின் கதை என்கிற பெயரில் அண்மையில் புத்தகம் எழுதி வெளியிட்டவர் ராமதாஸ்.  மக்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ பாமக கவலைப்படவில்லை.  பணத்துக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.  ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்தவர் ராமதாஸ். தேர்தல் கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் மட்டுமின்றி வேறு ஏதோகூட பின்னணியில் உள்ளது.
இவ்வாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

Label