OUR CLIENTS
மயிரிழையில் உயிர் தப்பிய கவர்னர்!
மயிரிழையில் உயிர் தப்பிய கவர்னர்! Posted on 19-Feb-2019 மயிரிழையில் உயிர் தப்பிய கவர்னர்!

  போபால், பிப்.19-

மத்திய பிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் படேல் பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால், அவர் பெரும் விபத்திலிருந்து தப்பினார். 

மத்திய பிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் படேல்.  உத்தர பிரதேசத்தில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்பதற்காக, போபாலிலிருந்து தனி விமானம் மூலம், பிரயாக்ராஜ் செல்ல திட்டமிட்டார்.   அவர் விமானத்தில் ஏறி அமர்ந்து, விமானம் புறப்பட தயாரான போது, அதில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இது குறித்து, விமானி, அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.   இதையடுத்து, ஆனந்திபென்னின், உ.பி., பயணம் ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை, விமானி உடனடியாக கண்டறிந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானியின் சாதுர்யமான செயலால், விமான விபத்தில் சிக்காமல், கவர்னர் ஆனந்திபென் படேல் மயிரிழையில் உயிர் தப்பினார். 

Label