OUR CLIENTS
ஓசூர் தொகுதி காலி என சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு!
ஓசூர் தொகுதி காலி என சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு! Posted on 19-Feb-2019 ஓசூர் தொகுதி காலி என சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு!

சென்னை, பிப்.19-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி உறுப்பினர் பாலகிருஷ்ணா ரெட்டி, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அவர் பதவியிழந்தார். இதையடுத்து ஓசூர் தொகுதி காலியானது. இந்நிலையில், ஓசூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 
ஏற்கனவே, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து 18 தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டது. இதேபோல், திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து திருவாரூர் தொகுதியும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், காலமானதையடுத்து அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

Label