OUR CLIENTS
காஷ்மீரை சேர்ந்த 250 பேரை பத்திரமாக வீட்டில் சேர்த்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்
காஷ்மீரை சேர்ந்த 250 பேரை பத்திரமாக வீட்டில் சேர்த்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள் Posted on 20-Feb-2019 காஷ்மீரை சேர்ந்த 250 பேரை பத்திரமாக வீட்டில் சேர்த்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்

ஜம்மு - காஷ்மீர், பிப்.20-

புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு பின், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஜம்மு - காஷ்மீர் மாநில மக்கள், தங்கள் சொந்த ஊர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இலவச ஹெல்ப்லைன் சேவையை அறிவித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள், அவர்களை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அந்த மாநிலத்தை சேர்ந்தோர், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அஞ்சி நடுங்கினர்.   அவர்களுக்கு உதவும் வகையில், ஹெல்ப்லைன் நம்பர் அறிவித்த, சி.ஆர்.பி.எப்., நிர்வாகம், அவர்களை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது.
இலவச ஹெல்ப்லைன் நம்பரில் தொடர்பு கொண்ட, சண்டிகர், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்த கல்லுாரி, பல்கலை மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் 250 பேர், பத்திரமாக தங்கள் வீட்டிற்கு சென்று சேர்ந்துள்ளனர்.   இவர்களை, பத்திரமாக ஓரிடத்தில் ஒருங்கிணைத்து, அதன் பின், அவர்களின் வீடு வரை பாதுகாப்பாக கொண்டு சேர்த்துள்ளனர், நம் சி.ஆர்.பி.எப்., வீரர்கள். அந்த வீரர்களுக்கு, மாணவர்களின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Label