OUR CLIENTS
காஷ்மீர் தாக்குதல் குற்றவாளியை அடையாளம் காண மாருதி சுசூகி உதவி
காஷ்மீர் தாக்குதல் குற்றவாளியை அடையாளம் காண மாருதி சுசூகி உதவி Posted on 20-Feb-2019 காஷ்மீர் தாக்குதல் குற்றவாளியை அடையாளம் காண மாருதி சுசூகி உதவி

ஜம்மு - காஷ்மீர், பிப்.20-

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகளை கண்டறியும் பணியில், என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு, மாருதி சுசூகி நிறுவன பொறியாளர்கள் உதவும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், இம்மாதம், 14ம் தேதி, சி.ஆர்.பி.எப்., துணை ராணுவப் படையினர் சென்ற வாகனத்தின் மீது, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.   இந்த தாக்குதலில், பாதுகாப்பு படை வீரர்கள் பலியாயினர். இந்த சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பாகங்களை சேகரித்து, அதில் உள்ள இஞ்ஜின் நம்பர் மற்றும் வேறு சில பாகங்களின் வடிவமைப்பின் அடிப்படையில், அந்த வாகனம் யாரிடம் வாங்கப்பட்டது, யாரின் பெயரில் உள்ளது உள்ளிட்ட விபரங்களை கண்டறிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  இதற்காக, மாருதி சுசூகி நிறுவனத்தை சேர்ந்த தேர்ந்த பொறியாளர்கள் குழு, புல்வாமா விரைந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் சிதறி கிடந்த வாகன பாகங்களை ஆய்வு செய்யும் அவர்கள், அது எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது. எந்த மாநிலத்தில், எந்த ஷோ ரூமில் விற்பனை செய்யப்பட்டது உள்ளிட்ட விபரங்களை கண்டறிய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  இதன் மூலம், தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Label