OUR CLIENTS
தலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு
தலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு Posted on 20-Feb-2019 தலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு

புதுடெல்லி, பிப்.20-

தலைநகர் டெல்லியில், இன்று காலை, 7:50 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 4 ஆக பதிவான இந்த நில அதிர்வால் பொதுமக்கள் பீதியடைந்தனர். 

ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று காலை, லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 4.6 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால், அங்குள்ள கட்டடிடங்கள் குலுங்கின. அந்நாட்டின் முக்கிய நகரங்களில், இந்த நில நடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.   இதன் எதிரொலியாக  தலைநகர் டெல்லி, உத்தர பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வு  ரிக்டரில், 4 ஆக பதிவானது.   இதனால் பீதியடைந்த பொதுமக்களில் சிலர், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். எனினும் சற்று நேரத்தில் பீதி அடங்கியது.   தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தாலேயே, டெல்லி, உ.பி.,யில் நில அதிர்வு உணரப்பட்டதாக, அமெரிக்காவை சேர்ந்த புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Label