OUR CLIENTS
மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!
மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு! Posted on 20-Feb-2019 மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!

மதுரை, பிப்.20-

மதுரையில் நடைபெற்று வரும் போராட்டத்தை தொடர்ந்து, மதுரை சர்வதேச விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மதுரை சர்வதேச விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டக்கோரி தேவர் அமைப்பினர் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி வந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்டோர் விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்டக் கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதை தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும்  அப்போது அவர்கள் அறிவித்து இருந்தனர். 
போராட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால், நேற்று மாலை 6 மணி முதல் மதுரை மாநகர் பகுதிக்கு உட்பட்ட அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டது. மேலும் தேவர் அமைப்பினர் அறிவித்தப்படி, கடையடைப்பு போராட்டமும், கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், மதுரை முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சர்வதேச விமானநிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Label