OUR CLIENTS
ஜெ.வின் பிறந்தநாளன்று ரூ.2,000 நிதியுதவி திட்டம் தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
ஜெ.வின் பிறந்தநாளன்று ரூ.2,000 நிதியுதவி திட்டம் தொடங்கி வைக்கிறார் முதல்வர்! Posted on 20-Feb-2019 ஜெ.வின் பிறந்தநாளன்று  ரூ.2,000 நிதியுதவி திட்டம் தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

சென்னை, பிப்.20- 

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கும் நிதியுதவித் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலினால் தமிழகத்தில் பல்வேறு மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய நலத்திட்டத்திற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் இதில் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இம்மாத இறுதிக்குள் தொழிலாளர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக இந்தத்தொகை செலுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார். முதற்கட்டமாக, இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்குவது குறித்த அரசாணை வெளியிடப்பட்டது. 
இந்த நிதியுதவியை தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த, ஒவ்வொரு மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சென்னை மாநகர ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது.   
இதன் தொடர்ச்சியாக இந்த திட்டம் எப்போது அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்தநாளான வருகிற 24ம் தேதி இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைக்க உள்ளார்.   இதேபோல், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன்படி, 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ, 6,000 உதவித் தொகை வழங்கும் திட்டமும் தமிழகத்தில் அன்றைய தினமே தொடங்கிவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.6,000 உதவித் தொகையானது ரூ.2,000 என்ற முறையில் 3 தவணையாக வழங்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தத்க்கது. 

Label