OUR CLIENTS
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு பள்ளிக்கல்வித்துறை அசத்தல் அறிவிப்பு
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு பள்ளிக்கல்வித்துறை அசத்தல் அறிவிப்பு Posted on 20-Feb-2019 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வு    பள்ளிக்கல்வித்துறை அசத்தல் அறிவிப்பு

சென்னை, பிப்.20-

2018-19 கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு 2 மணி நேரம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையைக் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.  மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது. 
அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018-19 கல்வியாண்டில் இருந்தே இந்த பொதுத்தேர்வு நடைமுறை கொண்டுவரப்படும்.   இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  அதில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி  5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை தொடக்க, நடுநிலை, மேல்நிலை, மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும். இதற்கு மாணவர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 
வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய அலுவலர்கள் கொண்டு குழு அமைத்து தேர்வு மையங்கள் அமைக்கப்படவேண்டும்.  
 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு 60 மதிப்பெண்களுக்கு, 2 மணி என்ற நேரம் என்ற அளவிலும் நடைபெறும்.   அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தனியார், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு  தேர்வுக் கட்டணம் ரூ 50ம், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்தப்படவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Label